130. அருள்மிகு சிவகுருநாத சுவாமி கோயில்
இறைவன் சிவகுருநாத சுவாமி, சிவபுரநாதர்
இறைவி சிங்காரவல்லி
தீர்த்தம் சூரிய தீர்த்தம்
தல விருட்சம் செண்பக மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், சுந்தரர்
தல இருப்பிடம் திருச்சிவபுரம், தமிழ்நாடு
வழிகாட்டி கும்பகோணம் - காரைக்கால் சாலையில் பைபாஸ் ரோடு வழியாக சுமார் 5 கி.மீ. தொலைவு சென்றால் இக்கோயிலை அடையலாம்.
தலச்சிறப்பு

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது பூமியெங்கும் சிவலிங்கங்களாக தெரிய, அவர் அங்க பிரதட்சணம் செய்து வந்து வழிபட்டதாகத் தல புராணம் தெரிவிக்கிறது. அதனால் 'சிவபுரம்' என்ற பெயர் பெற்றது. ஒரு சாபத்தினால் குபேரன், தனபதி என்னும் வணிகனாக இத்தலத்தில் பிறந்து சிவபெருமானை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். அவன் வழிபட்ட இலிங்க மூர்த்தியே 'சிவகுருநாதர்' என்று அழைக்கப்படுகிறார்.

Sivapuram AmmanSivapuram Moolavarமூலவர் 'சிவகுருநாத சுவாமி', 'சிவபுரநாதர்' என்னும் திருநாமங்களுடன், பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'சிங்காரவல்லி', 'பெரிய நாயகி' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், நடராஜப் பெருமான், சமயக் குரவர்கள் நால்வர், மகாலட்சுமி, பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

மகாவிஷ்ணு சுவேத வராஹராக வடிவெடுத்து வழிபட்ட தலம். பிரம்மா, இந்திரன், இந்திராணி, குபேரன், அக்னி, சந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம்.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். கோயில் தொடர்புக்கு: பாலசக்தி சிவாச்சாரியார் - 98653 06840

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com